Buhari Junction

Buhari Junction நம்பிக்கை மனிதர்களின் கதை
https://youtube.co
(4)

02/09/2025

ஆட்டுக்கறி உப்புக்கண்டம் வாங்க :8148465212

விகடன் டிஜிட்டல் விருது 2025ல் நமது buhari junction விருதுக்கான நாமினேஷனில் இருக்கிறது.விருது கிடைக்கிறதோ இல்லையோ ,விகடன...
01/09/2025

விகடன் டிஜிட்டல் விருது 2025ல் நமது buhari junction
விருதுக்கான நாமினேஷனில் இருக்கிறது.

விருது கிடைக்கிறதோ இல்லையோ ,விகடனின் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இருப்பதே பெரிய அங்கீகாரமாக பார்க்கிறேன். உங்கள் அன்பினாலும் ஆதரவினாலும் மட்டுமே இது சாத்தியம்.
அனைவரின் அன்பிற்கும் நன்றி…

#2025

விகடன் டிஜிட்டல் விருது 2025ல் நமது buhari junction விருதுக்கன நாமினேஷனில் இருக்கிறது.விருது கிடைக்கிறதோ இல்லையோ ,விகடனி...
01/09/2025

விகடன் டிஜிட்டல் விருது 2025ல் நமது buhari junction
விருதுக்கன நாமினேஷனில் இருக்கிறது.

விருது கிடைக்கிறதோ இல்லையோ ,விகடனின் விருதுக்ககான பரிந்துரை பட்டியலில் இருப்பதே பெரிய அங்கீகாரமாக பார்க்கிறேன். உங்கள் அன்பினாலும் ஆதரவினாலும் மட்டுமே இது சாத்தியம்.
அனைவரின் அன்பிற்கும் நன்றி…

Our Buhari Junction is nominated for Best Impact Creator – Vikatan Digital Awards 🙏Grateful for your love & support ❤️Al...
28/08/2025

Our Buhari Junction is nominated for Best Impact Creator – Vikatan Digital Awards 🙏
Grateful for your love & support ❤️
All the best to all the fellow nominees 🌟

விகடன் டிஜிட்டல் விருதில் –Best  Impact Creator பிரிவில் Buhari Junction பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது .இந்த பி...
28/08/2025

விகடன் டிஜிட்டல் விருதில் –Best Impact Creator பிரிவில் Buhari Junction பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது .

இந்த பிரிவல் இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

விபரங்கள்

tinyurl.com/Vik-Digi-Awards-25

28/08/2025

நலம் முயற்சி வாழ்த்துகள் Ravikumar Velusamy

சமீபத்தில் காயல் திரைப்படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்தேன். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் துவங்கும் இந்தப் படம், க...
22/08/2025

சமீபத்தில் காயல் திரைப்படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்தேன். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் துவங்கும் இந்தப் படம், காதலின் பெயரில் நிகழும் வன்முறைகளின் தொடக்கத்தை — வீட்டிலிருந்தே, குறிப்பாக பெண்களின் ஆதிக்க மனப்பான்மையிலிருந்தே — உளவியல் ரீதியாக இப்படியொரு ஆழத்துடன் வெளிக்கொணர்ந்தது இதுவரை எந்த திரைப்படமும் செய்யவில்லை.

அனுமோலின் அட்டகாசமான நடிப்பின் மூலம், தென்மாவட்டத்து பெண்களின் சாதிய மனநிலையின் உளவியலை தமயந்தி தோழர் மிகத் தெளிவாகவும் எதார்த்தமாகவும் திரையில் பதித்திருக்கிறார்.


காயல் வரும் செப்டம்பர் 5 திரையில் வெளியாக இருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்..!

“கொளுத்துற வெயில்ல தான் வேள,ஒண்ணுக்கு போக  ஒதுங்க கூட நல்ல இட வசதி இருக்காது,குடிக்க நல்ல தண்ணி இருக்காது.. ஆறு மாசம் வெ...
21/08/2025

“கொளுத்துற வெயில்ல தான் வேள,ஒண்ணுக்கு போக ஒதுங்க கூட நல்ல இட வசதி இருக்காது,குடிக்க நல்ல தண்ணி இருக்காது.. ஆறு மாசம் வெயில் ஆறு மாசம் மழைன்னு இருந்தது அப்போ,எப்போ மழையடிக்கும் எப்போ வேலை இல்லாம இருக்கும்னு சொல்ல முடியல… அறுநூறு ரூபாய சம்பளத்த 800 ஆக்க சொல்லி போராடிக்கிட்டு இருக்கோம்.யாரு காதுலயும் விழுகுற மாதிரி இல்ல”- உப்பள தொழிலாளர்கள்

Full video in buhari junction YouTube channel

மீண்டும் கூலியில் டும்கான் மாரி
20/08/2025

மீண்டும் கூலியில் டும்கான் மாரி

டும்கான் மாரியின் காதல் திருமணம் ,கிட்டத்தட்ட சுப்ரமணியபுரம் திரைப்படத்தை போலவே அமைந்த ஒன்று.திருவிழாக்களுக்கு ரேடியோ செ...
20/08/2025

டும்கான் மாரியின் காதல் திருமணம் ,கிட்டத்தட்ட சுப்ரமணியபுரம் திரைப்படத்தை போலவே அமைந்த ஒன்று.திருவிழாக்களுக்கு ரேடியோ செட் கட்ட போன இடத்தில் கார்த்திகாவை காதலிக்க தொடங்கி இருக்கிறார்.

இயக்குநர் சசிக்குமார் ,தன் முதல் படத்தின் நடிகன் என்கிற அளவில் பொருளாதார ரீதியாக மிகவும் பக்க பலத்துடன் இருந்திருக்கிறார். குடிப்பழக்கத்தால் மாரி எல்லை மீறி போக ஒருகட்டத்தில் அவரும் கைவிட தொடங்கிவிட்டார்.ஆட்டோ ஓட்டுவது,ரேடியோ செட் போடுவது என கிடைக்கிற வேலையெல்லாம் செய்துவந்த மாரிக்கு,இரண்டு ஆண்டுகளாக எந்த வேலையும் இல்லை வருமானமும் இல்லை. தற்போது எல்லாமுமாக அவரது மனைவி கார்த்திகா தான் இருக்கிறார். மேலும் வருடம் முழுதும் 35000 ரூபாய் சம்பளத்திற்காக முறுக்கு புழியம் வேலைக்கும் சென்றிருக்கின்றனர். கார்த்திகா தனியார் மருத்துவமனையில் பணிபுரிய,அவருக்கு சமையல் செய்து சாப்பாடு கொடுத்துவிட்டு வீட்டை கவனித்து வருகிறார் மாரி.

“அவன் அவன் சினிமாவுக்காக தவம் கிடக்குறான்,சினிமான்னாலே என்னானு தெரியாம சினிமாவுக்கு வந்ததால அதோட அருமை புரியல”என குடியால் சினிமா வாழ்க்கையை தானாகவே கெடுத்துக்கொண்டதாக சொல்லும் மாரி,இரண்டாவது இன்னிங்சுக்காக காத்திருக்கிறார்

டும்கான் மாரியின் பேட்டி பாகம் 1

https://youtu.be/8TaOEwsQ7zQ

டும்கான் மாரியின் பேட்டி பாகம் 2

https://youtu.be/qyXNvteO0xk

2007 ல் எடுத்த படங்கள் இவை.Camera-வை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத காலத்தில் கூட சில படங்களை எடுத்தேன்… சாதாரண d...
19/08/2025

2007 ல் எடுத்த படங்கள் இவை.Camera-வை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத காலத்தில் கூட சில படங்களை எடுத்தேன்… சாதாரண digital cam-ல தான். ஆனால் அந்த படங்களைக் காப்பாற்றி நிறுத்தியது ‘technique’ இல்லை, ‘feelings & emotions’ தான். இன்று கூட அந்த உணர்வுகள்தான் அவற்றை உயிரோடு வைத்திருக்கிறது என்று நம்புகிறேன். 💙
📸

தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுடன்..
19/08/2025

தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுடன்..

Address

Madurai
Madurai
625007

Alerts

Be the first to know and let us send you an email when Buhari Junction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Buhari Junction:

Share

Category